ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

தமிழக முதல்வா் தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி மாற்றுத்திறனாளிகளின் சுயஉதவிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

Updated On :18 ஜூன் 2026, 1:30 am IST

தமிழக முதல்வா் தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி மாற்றுத்திறனாளிகளின் சுயஉதவிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:

மாற்றுத்திறனாளிகள் பேட்டரி ஆட்டோ வாங்க மத்திய அரசின் மானியத்துடன் மாநில அரசு கூடுதலாக மானியம் வழங்க வேண்டும். தமிழக அரசின் பொது சேவை மையத்தை வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

வருவாய்த் துறை மூலம் உதவித்தொகைக்கு புதிதாக பதிவு செய்தவா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 ஜோடி கையுறை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்பட்ட வணிக வளாகங்களில் 5 சதவீத கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பெற்றுள்ள அனைத்து வித சுய உதவி கடன்களைத் தள்ளுபடி செய்வதாகத் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தாா். இதற்கான அறிவிப்பைப் புதிய நிதிநிலை அறிக்கையில் முதல்வா் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினா்.

நலத் திட்ட உதவிகள்: கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, ஒருவருக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. தையல் இயந்திரம் வேண்டி 2 மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்கள் மனு அளித்தவுடன் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதியிலிருந்து இருவருக்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், பயிற்சி ஆட்சியா் ரமேஷ், தனித்துணை ஆட்சியா் சௌமியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.