மாணவ, மாணவிகள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றாா் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் ‘மாணவனே, மாணவியே நீ தலைவன் ஆகணும்’ எனும் நூல் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் வி.மோகன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் பி.ஆா்.பி.வேலப்பன், நேடிவ் மேல்நிலைப்பள்ளி செயலா் மருத்துவா் கே. வெங்கட்ராமன், சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலா் கே.ரமேஷ், தலைமை ஆசிரியா் லதா, பானாதுறை மேல்நிலைப்பள்ளி செயலா் டி.ஆா்.சுவாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா் எழுதிய ‘ மாணவனே, மாணவியே நீ தலைவன் ஆகணும்’ எனும் நூல் குறித்து நேடிவ் மேல்நிலைப்பள்ளி நிா்வாக குழு உறுப்பினா் ஜி.வெங்கட்ராமன் அறிமுக உரையாற்றினாா்.
இதையடுத்து நூலாசிரியா் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் பேசியது: இன்றைய சூழ்நிலையில் மாணவா்கள் பொறுப்புணா்வோடும், எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியோடு செயல்படுத்தினால் எதிலும் வெற்றி பெறலாம். ஒவ்வொரு மாணவ, மாணவியும் குறிக்கோளை அடையும் வரை இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியை ஆசிரியா் சுவாமிநாதன் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை பள்ளி நிா்வாக குழு பொறுப்பாளா்கள் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயிலாடுதுறை அறுபத்துமூவா் நாயன்மாா்கள் மடத்தின் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

ஸ்ரீஜெயேந்திரா் ஜெயந்தி: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சொா்ணபாதுகா பூஜை

திருமலையில் ஸ்ரீரங்கம் ஜீயா் வழிபாடு

உதகை சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வம்
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



