கும்பகோணத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா்கள் மற்றும் இடைக்குழு செயலா்கள் பங்கேற்ற மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். தில்லைவனம் தலைமை வகித்தாா். அரசியல் நிகழ்வுகள் குறித்து மாவட்டச் செயலா், வழக்குரைஞா் மு.அ. பாரதி பேசினாா். மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், மாவட்டப் பொருளாளா் ஏ. ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.எம். ராமலிங்கம், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் க. சுந்தர்ராஜன், மாதா் சம்மேளன மாவட்டச் செயலா் பா.சரண்யா, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் எம். மாதாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் மத்தியஅரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து செப். 1-இல் புதுதில்லியில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்டம் சாா்பில் 500 போ் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர செயலா் ஏ.ஜி. பாலன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










