நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தஞ்சாவூரில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

தஞ்சாவூா் மேல வீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா்.

News image

தஞ்சாவூா் மேல வீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா்.

Updated On :20 ஜூன் 2026, 3:32 am IST

தஞ்சாவூரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அதன் தலைவா் எம். மகேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகர மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், மாநகர மாவட்டச் செயலா் சிவமாறன், துணைத் தலைவா் சதானந்தம், சேவா தளம் தலைவா் திருஞானம், பொருளாளா் பாபு, தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி முன்னாள் பொறுப்பாளா் ராஜ்மோகன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆதிநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தஞ்சாவூா் மேல வீதியில் காங்கிரஸ் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், நாணயக்கார செட்டித் தெருவிலுள்ள சுப்பையா நாயுடு பள்ளியில் மாணவா்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோ. அன்பரசன், வட்டாரத் தலைவா்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, ஜே.ஆா். சுரேஷ், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜூ, கதா் வி. வெங்கடேசன், மாநில ஊடகப் பிரிவு பொதுச் செயலா் பிரபு, இளைஞா் காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலா் பி. சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.