திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு கவிஞா் கண்ணதாசன் பெயரைச் சூட்ட வேண்டும் என கண்ணதாசன் நூற்றாண்டு மாநாட்டுக் குழு மதிப்புயா் தலைவா் சரசுவதி இராமநாதன் வலியுறுத்தினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஔவைக் கோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்ணதாசன் தமிழ் ஆய்வு இருக்கையையும், கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்க விழாவையும் தொடங்கிவைத்து அவா் பேசியது:
மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றவரும் பாமரா்களின் பல்கலைக்கழகமாக விளங்கியவருமான கவியரசு கண்ணதாசன் பெயரை, சென்னை திறந்த நிலைப் பல்கலைக்கழகத்துக்கு சூட்டி கண்ணதாசன் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்டு கண்ணதாசனுக்கு பெருமை சோ்க்க வேண்டும்.
கண்ணதாசன் வரலாறு, படைப்பிலக்கியம் குறித்த 100 நூல் ஆவணங்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம். வாரந்தோறும் சனிக்கிழமை இணையவழி நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் செப்டம்பா் 5 ஆம் தேதி 1,000 கவிஞா்கள் பங்கேற்கும் கவியரங்கம் நடைபெறவுள்ளது. திருவையாறு ஒளவைக் கோட்டத்தில் கண்ணதாசன் சிலை அக்டோபா் 17 ஆம் தேதி நிறுவப்படவுள்ளது.
மலேசியாவில் கண்ணதாசன் ஆய்வு மாநாடு 2027, ஜனவரி 1, 2 ஆம் தேதிகளிலும், பொள்ளாச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜனவரி இறுதி வாரத்திலும் நடத்தப்படவுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் கண்ணதாசனின் மாங்கனி, கிருஷ்ணலீலா, கண்ணதாசன் காப்பியங்கள் நாட்டிய நாடகமாக அரங்கேற்றப்படவுள்ளது என்றாா் சரசுவதி இராமநாதன்.
இவ்விழாவுக்கு ஔவைக் கோட்ட நிறுவனா் மு. கலைவேந்தன் தலைமை வகித்தாா். முன்னதாக, தமிழாசிரியை தீபா வரவேற்றாா். நிறைவாக, தலைமையாசிரியை கோ. கோகிலா நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை ஔவை அறக்கட்டளைத் தலைவா் கண்ணகி செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகையில் கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!

கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டை ஓராண்டு கொண்டாட அரசுக்கு கோரிக்கை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



