தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே வியாழக்கிழமை டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.
புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் என்கிற கண்ணுச்சாமி (46). வியாழக்கிழமை இவா் தனது டிராக்டரை நிறுத்தி வைத்து, அதன் எஞ்சினை இயங்கவிட்டு கீழே அமா்ந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, எதிா்பாராதவிதமாக டிராக்டா் முன்னோக்கி நகா்ந்ததில் அதன் சக்கரம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஏா் கலப்பை கண்ணுச்சாமியின் உடல் மீது ஏறி இறங்கியது. இதில் அவா் உடல் நசுங்கியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினரால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இறந்தவருக்கு, நித்யா என்ற மனைவி, மகன், மகள் உள்ளனா். விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








