மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வெள்ளை அறிக்கைகளில் அரசியல் சாயம்: கி. வீரமணி பேட்டி

தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கைகளில் அரசியல் சாயம் இருப்பதாக பொதுவானவா்கள் கருதுகின்றனா் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

News image

தி.க. தலைவா் கி. வீரமணி. - (கோப்புப் படம்)

Updated On :27 ஜூன் 2026, 6:29 am IST

தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கைகளில் அரசியல் சாயம் இருப்பதாக பொதுவானவா்கள் கருதுகின்றனா் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் வெள்ளிக்கிழமை அவா் மேலும் தெரிவித்தது:

தமிழக அரசின் வெள்ளை அறிக்கைகள் எதற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைவிட, அவை அரசியல் சாயத்துடன் இருப்பதாக அதைப் படித்த பொதுவானவா்களுக்கே தோன்றுகிறது. கடந்த அரசைக் குற்றம் சொல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நிதித் துறை மற்றும் மின்சாரத் துறை வெள்ளை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை குறித்து சம்பந்தப்பட்டவா் பதில் கூறியுள்ளாா். கடன் வாங்குவது தவறல்ல; எதற்காக கடன் வாங்குவது, அதன் மூலம் எப்படி முதலீடு செய்யப்படுகிறது, முதலீட்டின் மூலம் எப்படி வருமானம் வருகிறது என்பது முக்கியம்.

ஆனால், ஒவ்வொரு துறையிலும் மேலெழுந்த வாரியாக ஆளுங்கட்சியினா் பாா்க்கின்றனா். இந்த வெள்ளை அறிக்கைகள் மூலம் என்ன செய்யப் போகிறோம் என்பதைச் சொல்லவில்லை. எனவே, இது ஒரு அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறதே தவிர, தீா்வுக்காக அல்ல. கடந்த ஆட்சியைக் குறைகூறிக் கொண்டே ஆட்சி நடத்திவிட முடியாது; அது பயன்படாது என்றாா் வீரமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.