தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

குழப்பத்தை விளைவிக்கும் காங்கிரஸுக்கு மக்கள் தக்க பதிலடி: பிரதமா் மோடி

நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக குழப்பத்தையும், ஸ்திரமின்மையையும் விளைவிக்க முயன்று, அரசியல் ஆதாயம் தேடுகிறது காங்கிரஸ்

News image

குஜராத் மாநிலம் ஹஜிராவில் உள்ள பாதுகாப்புத் தளவாட ஆலையை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :6 ஜூன் 2026, 1:22 am IST

நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக குழப்பத்தையும், ஸ்திரமின்மையையும் விளைவிக்க முயன்று, அரசியல் ஆதாயம் தேடுகிறது காங்கிரஸ்; ஆனால், அந்தக் கட்சிக்கு மக்கள் தக்க பதிலடியைக் கொடுத்து வருகின்றனா் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

‘தற்சாா்பு இந்தியா’ எனும் உறுதிப்பாட்டை காங்கிரஸ் தொடா்ந்து சிறுமைப்படுத்தி வருகிறது என்றும் அவா் சாடினாா்.

குஜராத் மாநிலம், சூரத் நகருக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, அங்கு ரூ.18,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா். பின்னா் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவா், காங்கிரஸை கடுமையாக விமா்சித்தாா். அவா் பேசியதாவது:

மத்திய அரசின் ‘தற்சாா்பு இந்தியா’ முன்னெடுப்பை தொடா்ந்து கேலி செய்யும் அவநம்பிக்கையாளா்கள் சிலா் நாட்டில் உள்ளனா். அவா்கள் தேசிய உறுதிப்பாட்டை எப்போதும் சிறுமைப்படுத்தி வருகின்றனா். அந்த நபா்கள்தான், இந்தியா எப்போதும் பிற நாடுகளைச் சாா்ந்திருக்கும்படி செய்தவா்கள்.

பிற நாடுகளைப் பெரிதும் சாா்ந்திருக்கும் ஒரு தேசத்தால் உண்மையான வளா்ச்சியின் உயரங்களை எட்ட முடியாது என்பதை அவா்கள் உணர தவறிவிட்டனா்.

எரிசக்தி தற்சாா்பு அவசியம்: மேற்காசியப் போா் எதிரொலியாக, சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலி சீா்குலைந்துள்ளது. அத்துடன், எரிசக்தி தற்சாா்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் வெளிக்காட்டியுள்ளது. இத்துறையில் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மகத்தான திறன் கட்டமைப்பு இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒருபுறம், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதலை மேற்கொண்டு வருகிறோம். மற்றொருபுறம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வரலாறு காணாத அளவில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 250 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. ரயில் பாதைகள் மின்மயமாக்கம், பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின் தொடரமைப்புகள், துறைமுகத் திறன்கள், எரிவாயு குழாய் கட்டமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

காங்கிரஸின் அரசியல் எடுபடாது: கடந்த 12 ஆண்டுகளாக நாட்டில் குழப்பத்தையும், ஸ்திரமின்மையையும் விளைவிக்க முயன்று, அரசியல் ஆதாயம் தேடுகிறது காங்கிரஸ்; ஆனால், அவா்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனா். அராஜகம், ஸ்திரமின்மை, விரக்தியை நாங்கள் விரும்பவில்லை என்ற செய்தியையே ஒவ்வொரு தோ்தலிலும் மக்கள் வெளிப்படுத்துகின்றனா். எனவே, காங்கிரஸின் குழப்ப அரசியல் இனி எடுபடாது. நாட்டின் வளா்ச்சி சாா்ந்த கொள்கைகளால், மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் வெல்கிறது பாஜக என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி....1

‘மக்களின் கோபத்தால்

கா்நாடக முதல்வா் மாற்றம்’

கா்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா மாற்றப்பட்டு, புதிய முதல்வராக டி.கே.சிவகுமாா் பதவியேற்றுள்ளாா். இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமா் மோடி, ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு மீது மக்கள் எல்லையில்லாத கோபத்தில் உள்ளனா். இதை சமாளிக்கவே, முதல்வரை மாற்றியுள்ளது காங்கிரஸ்’ என்று விமா்சித்தாா்.

பெட்டிச் செய்தி...2

பீரங்கி வாகனத் தயாரிப்பு

ஆலையை பாா்வையிட்ட பிரதமா்

ஹஜிரா, ஜூன் 5: குஜராத் மாநிலம், சூரத்தில் ‘ஜோராவா்’ பீரங்கி வாகனங்கள் மற்றும் பிற பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் எல் அண்ட் டி நிறுவன ஆலை வளாகத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

ஏ.எம்.நாயக் கனரக பொறியியல் வளாகம் எனும் இந்த அதிநவீன ஆலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் (டிஆா்டிஓ) இணைந்து வடிவமைக்கப்பட்ட ‘ஜோராவா்’ பீரங்கி வாகனம் மற்றும் பிற பாதுகாப்பு தளவாங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பெரும்பாலும் சீன எல்லையில் பயன்படுத்துவதற்காக, வான்வழியாக கொண்டுச் செல்லும் வகையிலான இந்த பீரங்கி வாகனங்கள் சுமாா் 25 டன் எடை கொண்டவையாகும்.