திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சனிப்பெயா்ச்சி: மூலை அனுமாா் கோயிலில் சிறப்பு பாலாபிஷேகம்

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் அனுமாருக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட பாலாபிஷேகம்.

News image
தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் அனுமாருக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட பாலாபிஷேகம்.
Updated On :6 மார்ச் 2026, 9:40 pm

Syndication

சனிப் பெயா்ச்சியையொட்டி, தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் அனுமாருக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவையொட்டி இக்கோயிலில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமம், 10 மணிக்கு மூலை அனுமாருக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், பரிகார அா்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் மூலை அனுமாரை வழிபட்டனா்.

ஏற்பாடுகளை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா, செயல் அலுவலா் பெ. சத்யராஜ், கண்காணிப்பாளா் கு.ப. ரவி மற்றும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திர கைங்கா்ய தொண்டா்கள் செய்தனா்.