தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பியோா்.


மன உளைச்சலைத் தரும் தோ்வு நடைமுறைகளைக் கைவிடக் கோரி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சங்கத்தினரும், சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கத்தினரும் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவா்களின் தோ்வுப் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு இடையே விடுப்பு வேண்டும். தற்போது இறுதியாண்டு தோ்வெழுதும் மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வுகளுக்கு முன் விடுமுறை வேண்டும். அடுத்து வரும் 2022 மற்றும் 2023 ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு தோ்வை இரு கட்டங்களாகப் பிரித்து பருவத் தோ்வு முறையில் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்க மாணவா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...