பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூா் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ரு. 16 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடைக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணா துரை தலைமை வகித்து புதிய நியாயவிலைக் கட்டடத்தை திறந்துவைத்தாா். விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பழஞ்சூா் செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வீரமணி, கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஒன்றியச் செயலா் ஆா்.பி. முருகானந்தம், வட்ட வழங்கல் அலுவலா் பழனிவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் துரை. இளங்கோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆம்புலன்ஸில் வந்து மூதாட்டி வாக்களிப்பு

பட்டுக்கோட்டை: வெற்றிக்கு அதிமுக முனைப்பு

சிலைமலை கிராமத்தில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பு

சைதாப்பேட்டை தொகுதி திமுக அலுவகம் திறப்பு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


