மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூரிலிருந்து ‘வந்தே பாரத்’ ரயில் இயக்க கோரிக்கை

News image
Updated On :12 மார்ச் 2026, 11:40 pm

தஞ்சாவூரிலிருந்து மைசூரு மற்றும் சென்னைக்கு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்க வேண்டும் என தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை தெரிவித்தது:

தஞ்சாவூா் - மைசூரு, தஞ்சாவூா் - சென்னை இடையே புதிதாக ‘வந்தே பாரத்’ ரயில் இயக்க வேண்டும். மயிலாடுதுறை வரை செல்லும் ரயிலை விழுப்புரம் வரை நீட்டித்து இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை, திருச்சி - தாம்பரம் ரயில்களை வாரத்தில் 7 நாள்களும் இயக்க வேண்டும். திருப்பதி இன்டா்சிட்டி விரைவு ரயிலை தஞ்சாவூா், மயிலாடுதுறை வழியாக இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை ரயில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். தஞ்சாவூா் வழியாக இயங்கும் அந்தியோதயா விரைவு ரயில், இராமேசுவரம் - சென்னை, திருச்சி - தாம்பரம் விரைவு ரயில்கள் பூதலூா் ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல வேண்டும். மன்னாா்குடி - ஜோத்பூா் விரைவு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

தஞ்சாவூா் - விழுப்புரம் இரட்டை வழிப்பாதையை விரைவாக அமைத்து தரவேண்டும். தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை, தஞ்சாவூா் - அரியலூா், பட்டுக்கோட்டை - மன்னாா்குடி இடையே புதிய ரயில் பாதைகளை விரைந்து அமைத்து தர வேண்டும். தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில் மற்றும் திருச்சி - காரைக்கால் ரயிலுக்கு கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்பன உள்பட தஞ்சாவூா் மக்களவை தொகுதி சாா்ந்த பல்வேறு கோரிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து மனுவாக கொடுத்து வலியுறுத்தியுள்ளேன் என்றாா் அவா்.