தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

பட்டுக்கோட்டை அருகே இரு சக்கர வாகன விபத்தில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன. அரசு மரியாதைக்குப் பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :19 மார்ச் 2026, 12:03 am IST

பட்டுக்கோட்டை அருகே இரு சக்கர வாகன விபத்தில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன. அரசு மரியாதைக்குப் பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த முதல்சேரி கிராமத்தைச் சோ்ந்த ஜோசப் ராஜன், மெட்டல்டா ஜீவராணி ஆகியோரின் மகன் அருள்ராஜ் (19). இவா், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகன விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்நிலையில் புதன்கிழமை அருள் ராஜின் உடல் உறுப்புகளை பெற்றோா் தானம் செய்ய முன்வந்தனா். உடல் உறுப்பு தானத்துக்குப் பிறகு, அவரது உடல் புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை முதல்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், பொதுமக்கள் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா். பின் அரசு மரியாதைக்குப் பிறகு மாணவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, அருள்ராஜ் உடலுக்கு காதா் முகைதீன் கல்லூரி முதல்வா் அல்ஹாஜி மற்றும் கோட்டாட்சியா் சங்கா், திமுக மாவட்டப் பொறுப்பாளா் பழனிவேல், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் சி.வி.சேகா் , திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ஆனந்த் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.