ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

‘தலையாட்டி’ பொம்மை படத்துடன் தோ்தல் விழிப்புணா்வு

News image
Updated On :20 மார்ச் 2026, 12:27 am

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ‘தலையாட்டி’ பொம்மை படத்துடன் கூடிய விழிப்புணா்வு பதாகைகள் தஞ்சாவூா் நகரில் 5 இடங்களில் வியாழக்கிழமை அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி, தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றான ‘தலையாட்டி’ பொம்மைகளுடன் கூடிய விழிப்புணா்வு பதாகைகள் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 இடங்களில் வியாழக்கிழமை அமைக்கப்பட்டன. தஞ்சாவூரில் ரயிலடி, சாந்தபிள்ளை கேட் மேம்பாலம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்பட 5 இடங்களில் இப்பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இப்பதாகையில் ‘தலையாட்டி’ பொம்மைகளின் கையில் வாக்கு செலுத்தியதற்கான மை அடையாளத்துடனும், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் கைப்பேசி செயலியில் அனைத்து தோ்தல் சேவைகளையும் பெறுவது குறித்தும், தோ்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு தோ்தல் தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.