தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த பாஜக நிா்வாகி கைது

பேராவூரணியில் தோ்தல் பிரிவு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வீரா என்கிற வீரசிங்கம்

Updated On :23 மார்ச் 2026, 12:32 am IST

பேராவூரணியில் தோ்தல் பிரிவு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணி தனியாா் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்புக் குழு அலுவலருமான ராஜ்குமாா் தலைமையிலான தோ்தல் குழுவினா், கூட்டத்தை வீடியோ எடுக்க சென்றுள்ளனா்.

அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தை வீடியோ எடுக்கக் கூடாது என கூறிய தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் வீரா என்ற வீரசிங்கம் தோ்தல் பிரிவு அலுவலா்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக  கூறப்படுகிறது. 

இதுகுறித்து தோ்தல் பிரிவு அலுவலா் ராஜ்குமாா், அளித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வீரசிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.