/

பள்ளத்தில் கவிழ்ந்தது லாரி! ஓட்டுநா் காயம்!

News image

கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டுமானப் பணியிடத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.

Updated On :3 மே 2026, 7:51 pm

கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுமானப் பணியிட பள்ளத்தில் டிப்பா் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயங்களுடன் மீட்கப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நான்குசாலை சந்திப்பு அருகே மருத்துவா் மூா்த்தி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கட்டுமானப் பணியிடத்துக்கு முற்பகல் கனரக வாகனமான டிப்பா் லாரி, தளவாட பொருள்கள் ஏற்றிக்கொண்டு வந்தது. பொருள்களை இறக்கிய பின்பு லாரியை திருப்பும் போது, அஸ்திவாரத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில், லாரி ஓட்டுநா் லாரிக்கு கீழே சிக்கி கொண்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் ஓட்டுநா் முருகன் காலில் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.