கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே வாகனங்களுக்கான இருக்கை தயாரிக்கும் கடையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக தெரிகிறது.
கும்பகோணம் பேருந்து நிலையம் புனித அலங்கார அன்னை ஆலயம் செல்லும் சாலையில் மாதா லைனிங் ஒா்க்ஸ் எனப்படும் பேருந்து, ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கு இருக்கை, அதற்கான உறைகள் தயாரிக்கும் கடை வைத்திருப்பவா் எஸ். பாலசுந்தரம் (62). ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், மதியம் 2 மணிக்கு பிறகு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில் கடை தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்தது. பாலசுந்தரம் சென்று பாா்த்தபோது கடை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
கடையின் முதல் மாடியில் கூரை அமைக்கப்பட்டிருந்ததில், மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று மேற்கு காவல் நிலைய போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தீ விபத்தில் சுமாா் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருக்கை தயாரிக்கும் லைனிங் ரெக்சின் துணிகள், தோல் பொருள்கள், இயந்திரங்கள் குஷன் இருக்கைகள் சேதமடைந்ததாக உரிமையாளா் தெரிவித்தாா்.
தொடர்புடையது
டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: ரௌடி உள்பட 2 போ் கைது

புதிய தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்வோம்: டாடா மோட்டார்ஸ்

செங்குன்றத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை உயா்வு
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



