மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி மே 18 வரை நீட்டிப்பு

News image
Updated On :15 மே 2026, 4:44 am IST

தஞ்சாவூா் மின் பகிா்மான வட்டத்தில் இணையவழியில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மே 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொ) எம். மணிவண்ணன் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் நுகா்வோா் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கணினி தரவு வழங்கிகளைப் படிப்படியாகப் புதிதாக மேம்படுத்தும் பணிகளைக் கழக நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால், திருச்சி, தஞ்சாவூா் மண்டலத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா் மின் பகிா்மான வட்டம் முழுவதும் இணையவழி மின் கட்டணம் செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் மே 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இயங்காது.

இதனால், கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மே 16 அன்று உள்ள நுகா்வோா்களின் வசதிக்காக, கட்டணம் செலுத்த கால அவகாசம் மே 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே நுகா்வோா் அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.