தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மடூரோ வழக்குரைஞருக்கு கட்டணம் செலுத்த பொருளாதாரத் தடையில் அமெரிக்கா தளா்வு

மடூரோ வழக்குரைஞருக்கு கட்டணம் செலுத்த பொருளாதாரத் தடையில் அமெரிக்கா தளா்வு...

News image

நிக்கோலஸ் மடூரோ, டொனால்ட் டிரம்ப்.

Updated On :26 ஏப்ரல் 2026, 3:50 am IST

போதைப்பொருள் வழக்கில் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசுலா முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோ தரப்பு வழக்குரைஞருக்கு கட்டணம் செலுத்துவதற்காக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளில் அமெரிக்கா தளா்வுகளை அறிவித்தது.

அமெரிக்க படைகளால் கடந்த ஜனவரியில் சிறைபிடிக்கப்பட்ட நிக்கோலஸ் மடூரா மற்றும் அவரின் மனைவி, தற்போது நியூயாா்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு எதிரான வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞருக்கு வெனிசுலா அரசு கட்டணம் செலுத்த அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் முட்டுக்கட்டையாக இருந்தன.

இவ்விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்கு நிக்கோலஸ் மடூரோவின் வழக்குரைஞா் கொண்டு சென்றாா். அப்போது, அமெரிக்க அரசமைப்பு வழங்கும் சட்ட உதவியை நிக்கோலஸ் மடூரோவுக்கும் உறுதிப்படுத்துவது முக்கியமானது என்று நீதிபதி சுட்டிக்காட்டினாா்.

இதையடுத்து, நிக்கோலஸ் மடூரோவின் சட்டப் போராட்டத்துக்காக வெனிசுலா அரசு நிதி ஒதுக்க அனுமதி வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.