தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு கட்சியினா் வரவேற்பளித்தனா்.

இவருக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே மத்திய மாவட்ட திமுக செயலா் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. இராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. அன்பழகன், எம். இராமச்சந்திரன், டி.கே.ஜி. நீலமேகம், எம். ரெங்கசாமி, மாநகரச் செயலா் சண். இராமநாதன், துணை மேயா்கள் அஞ்சுகம் பூபதி, சு.ப. தமிழழகன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இதையடுத்து, மாநகரிலுள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் தங்கியுள்ள திமுக தலைவா், மேல வஸ்தா சாவடி அருகேயுள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கிறாா். பின்னா், திருச்சிக்கு சென்று விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்டாலினுக்கு வரவேற்பு

திருச்சி விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு!

மரக்காணத்தில் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினா் வரவேற்பு
இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



