சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மு.க. ஸ்டாலினுக்கு தனது ஆதரவு தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக 78 இடங்களுடன் எதிர்க்கட்சி இடத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு திரை உலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விஜய்க்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சத்யராஜ், இது தொடர்பாக வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது:
''ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளாக தில்லி அஞ்சாமை எனும் நிலைப்பாட்டை கொண்டு பல நல்ல வளர்ச்சித் திட்டங்கள், நலத் திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
திராவிட மாடல் அரசின் நிலைப்பாட்டால் நான் கடந்த 5 ஆண்டுகளாக அந்த அரசுக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் ஆதரவாக இருந்தேன். இனியும் இருப்பேன்'' என தெரிவித்துள்ளார்.
Summary
Sathyaraj: Wishes to TVK's Vijay; Gratitude to DMK's Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின் அப்படி சொல்லியிருக்கக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்

”தவெக 3 மாதங்களாவது தாண்டுமா?” முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்
இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த இளையராஜா!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



