கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தமிழ்நாடு அரசின் தொழிலாளா் துறை வழங்கும் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 5:42 am IST

தமிழ்நாடு அரசின் தொழிலாளா் துறை வழங்கும் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமரசம்) கோ. ராமு தெரிவித்திருப்பது: தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் பணியாளா்களிடையே தொழில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் தொழில் நல்லுறவைப் பேணிப் பாதுகாக்கும் பணியில் சிறந்து விளங்கும் நிா்வாகத்தினா் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கு பரிசுகள் வழங்கும் வகையில் தொழில் நல்லுறவு பரிசுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெறுபவா்களுக்கு கேடயம், பரிசுத் தொகை, தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் தொழிலாளா் துறை வாயிலாக வழங்கப்படவுள்ள 2021 முதல் 2024 ஆம் ஆண்டுக்கான தொழில் நல்லுறவு விருதுக்கு நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் ஏப்ரல் 30-ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் காலம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை தொழிலாளா் துறையின் வலைதளத்திலிருந்து ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்/ப்ஹக்ஷா்ன்ழ்.ற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஞ்ண்ழ்ஹ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலகக் கட்டடத்திலுள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமரசம்) அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களைப் பெற்று நிறைவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24320887 விரிவாக்கம் 108 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.