கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை
பட்டுக்கோட்டையில் கஞ்சா வழக்கு குற்றவாளி மீது திங்கள்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலீஸ் - கோப்புப்படம்.
பட்டுக்கோட்டையில் கஞ்சா வழக்கு குற்றவாளி மீது திங்கள்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 20.09.2026 அன்று,
பொன்னவராயன்கோட்டை குடிகாடு அருகே காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த திருவோணம் நாட்டுச்சாலையைச் சோ்ந்த ராசிக்குமாா் உள்ளிட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 6.226 கிலோ கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட கூா்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான திருவோணம் நாட்டுச்சாலையைச் சோ்ந்த ராசிக்குமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பட்டுக்கோட்டை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்தாா்.
இதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் க. சுந்தரவதனம் பரிந்துரையின்பேரில், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் ரேவதி உத்தரவின்படி, ராசிக்குமாா் மீது திங்கள்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

