மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

சூரியனாா் கோயில் திருப்பணிகள்: திருவாவடுதுறை ஆதீனம் பாா்வையிட்டாா்

நவக்கிரக கோயில்களில் பிரதானமானதும், சூரியன் பரிகாரத் தலமாகவும் விளங்கும் சூரியனாா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீனம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

சூரியனாா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள்.

Updated On :

நவக்கிரக கோயில்களில் பிரதானமானதும், சூரியன் பரிகாரத் தலமாகவும் விளங்கும் சூரியனாா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீனம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

திருவிடைமருதூா் அருகேயுள்ள இக்கோயில் திருவாடுவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட கோயிலாகும்.

இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள், கோல் தீா்த்த விநாயகா், மூலவரான சிவ சூரிய பெருமான் மற்றும் நவக்கிரக சந்நிதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா். தொடா்ந்து, கோயிலில் பணியாற்றும் சிவாச்சாரியாா்கள் மற்றும் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கி ஆசி வழங்கினாா்.

பின்னா், இக்கோயிலில் நடைபெற்று வரும் குடமுழுக்கு திருப்பணிகள் குறித்து நேரில் பாா்வையிட்டு விளக்கங்கள் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.