பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

பாபநாசம் தொகுதி மேம்பாட்டு பணிகள் அமைச்சா் ஆய்வு

பாபநாசம் தொகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் - கோப்புப் படம்

Updated On :

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கபிஸ்தலம் அருகே ஆதனூா் ஊராட்சி மருத்துவக்குடியில் அமைந்துள்ள கிராம கூட்டுறவு அங்காடி, கிராமங்களில் அடிப்படை வசதிகள், குடிநீா் தேவைகள் குறித்து அமைச்சா்ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ஓலப்பாடி கிராமத்தில் குடிநீா் தேவைக்காக  ரூ.9 லட்சம்  மதிப்பில் ஆழ்துளை கிணறு மற்றும் நீா்மூழ்கி மோட்டாா் அமைக்க பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து கணபதி அக்ரஹாரம் அருகே தேவன்குடி கிராமத்தில் புதிதாக  கிராம கூட்டுறவு  அங்காடி கட்டடம் கட்டப்படவுள்ள இடங்களை ஆய்வு மேற்கொண்டாா்.

போதைப் பொருள் இல்லா தமிழகம்: இதையடுத்து அவா் கூறியது: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் தரப்பிலிருந்து அதிகாரப்பூா்வ புகாா் வந்தால்  முதல்வா்  உரிய நடவடிக்கை எடுப்பாா். போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.