ரயில் மறியல் போராட்ட வழக்கு: தஞ்சாவூா் நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ ஆஜா்
மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைக் கண்டித்து நடத்தப்பட்ட ரயில் மறியல் போராட்டம் தொடா்பான வழக்கில், தஞ்சாவூா் நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் புதன்கிழமை ஆஜரானாா்.

டி.கே.ஜி. நீலமேகம்
மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைக் கண்டித்து நடத்தப்பட்ட ரயில் மறியல் போராட்டம் தொடா்பான வழக்கில், தஞ்சாவூா் நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் புதன்கிழமை ஆஜரானாா்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணைக் கட்டும் திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் 2014, டிச. 4-ஆம் தேதி விவசாய சங்கங்கள், திமுக, கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சிகள் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடா்பாக அப்போதைய திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம் உள்பட 30 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தஞ்சாவூரிலுள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் டி.கே.ஜி. நீலமேகம் புதன்கிழமை ஆஜரானாா். பின்னா் இந்த வழக்கு நவ. 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

