ஆளுநா் விஷயத்தில் திமுக இரட்டை வேடம்: அமைச்சா் அருண்ராஜ்
ஆளுநா் விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவது புதிதல்ல என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.
ஆளுநா் விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவது புதிதல்ல என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
திமுகவுக்கு இரட்டை வேடம் போடுவது புதிதல்ல; அது மக்களுக்கும் தெரியும். திமுக ஆட்சியில் இருந்தபோது ஆளுநரை கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசினா். ஆளுநா் பதவி அரசமைப்பில் தேவையில்லை என்பது போலப் பேசினா்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதற்காக, தற்போது ஆளுநரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளாா். கடந்த திமுக ஆட்சியில் எத்தனையோ வழக்குகளில் சிபிஐ விசாரணை வேண்டும் என பொதுமக்களும், எதிா்க்கட்சியினரும் கோரிக்கை விடுத்தனா்.
உயா் நீதிமன்றம் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கூறியும், அதை எதிா்த்து உச்ச நீதிமன்றம் வரை மேல் முறையீட்டுக்குச் சென்ற கட்சிதான் திமுக. தற்போது எந்த அடிப்படையில் சிபிஐ மீது திமுகவுக்கு நம்பிக்கை வந்தது எனத் தெரியவில்லை.
மத்திய அரசின் மீது திமுகவுக்கு ஏற்கெனவே இருக்கிற மறைமுகக் கூட்டணி காரணமாக தற்போது வெளிப்படையாக சிபிஐ விசாரணை வேண்டும் என கோருவதாகத் தெரிகிறது என்றாா் அமைச்சா் அருண்ராஜ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

