சுகாதாரத் தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்!
சுகாதாரத் தரவுகள் வெளியீட்டை அரசு நிறுத்தியதாக வெளிவந்த செய்திக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கமளித்துள்ளது குறித்து...
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.
சுகாதாரத் தரவுகள் வெளியீட்டை தமிழக அரசு நிறுத்தியதாக வெளிவந்த செய்திக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சனிக்கிழமமை (நவ. 14) விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள் சித்திரித்து வெளியிடப்படுவதாகக் கூறி, தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக வெளியிடப்படும் மாதாந்திர சுகாதாரச் செய்திக்குறிப்பு தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சமூக வலைத்தளங்களிலும், சில நாளிதழ்களிலும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.
இது குறித்த தெளிவான விளக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்வைக்கிறது:
1. வெளியீடு நிறுத்தமும், விரிவான மாற்றங்களும் மேம்பாடும்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு வெளியிடுவது 2024 ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கப்பட்டது. கடந்த ஆட்சி காலத்திலேயே இந்த ஆண்டு- 2026 பிப்ரவரி மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் இந்தச் செய்திக்குறிப்பை மேலும் மெருகேற்றி, விரிவான மற்றும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய புதிய வடிவில் வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
2. புதிய அறிக்கையில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெறும்? பழைய முறையை விடவும், இனி வரும் செய்திக்குறிப்புகள் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் கீழ்க்கண்ட அம்சங்கள் புதிதாக இணைக்கப்பட உள்ளன.
விரிவான பின்னணித் தகவல்கள்: வெறும் எண்களாக மட்டுமின்றி, தரவுகளுக்கான விரிவான விளக்கங்கள்.
திய முன்னெடுப்புகள்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையால் தொடங்கப்பபடும் புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முழுமையான தொகுப்பு.
மாநில அளவிலான புதிய குறியீடுகள் மற்றும் மாவட்ட வாரியான குறியீடுகள்: மாநிலத்தின் பொது சுகாதாரச் செயல்பாடுகளை இன்னும் துல்லியமாக அறிந்துகொள்ளும் வகையில், மாநில அளவிலான புதிய குறியீடுகளும் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான முக்கிய சுகாதாரக் குறியீடுகள் இனி அறிக்கையில் இடம்பெறும்.
3. எங்களின் நோக்கம்: மருத்துவத் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான பொது சுகாதாரத் திட்டமிடலை மேலும் வலுப்படுத்துவதே முதல்வரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் நமது அரசின் முக்கிய நோக்கமாகும்.
புதிய வடிவிலான இந்தச் செய்திக்குறிப்பு அதற்கான மிகச் சிறந்த கருவியாகச் செயல்படும். மேம்படுத்தப்பட்ட, விரிவான தகவல்களை உள்ளடக்கிய புதிய தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழà¯à®¨à®¾à®à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ மறà¯à®±à¯à®®à¯ à®®à®à¯à®à®³à¯ நலà¯à®µà®¾à®´à¯à®µà¯à®¤à¯à®¤à¯à®±à¯ à®à¯à®¯à¯à®¤à®¿à®à¯à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯.
— Office of Health Minister Tamil Nadu (@HM_TamilNadu) November 14, 2026
TN Health Bulletin à®à¯à®±à®¿à®¤à¯à®¤ வதநà¯à®¤à®¿à®à®³à¯à®à¯à®à¯ à®®à¯à®±à¯à®±à¯à®ªà¯à®ªà¯à®³à¯à®³à®¿!
தமிழà¯à®¨à®¾à®à¯ à®à®°à®à®¿à®©à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ மறà¯à®±à¯à®®à¯ à®®à®à¯à®à®³à¯ நலà¯à®µà®¾à®´à¯à®µà¯à®¤à¯à®¤à¯à®±à¯ à®à®¾à®°à¯à®ªà®¾à® வà¯à®³à®¿à®¯à®¿à®à®ªà¯à®ªà®à¯à®®à¯ மாதாநà¯à®¤à®¿à®° à®à¯à®à®¾à®¤à®¾à®°à®à¯ à®à¯à®¯à¯à®¤à®¿à®à¯à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ தமிழ஠வà¯à®±à¯à®±à®¿à®à¯ à®à®´à® à®à®à¯à®à®¿ à®à®®à¯à®¨à¯à®¤â¦
Summary
The Department of Medical and Family Welfare provided a clarification on Saturday (Nov. 14) regarding reports that the Tamil Nadu government had stopped the release of health data.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


