மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

மேக்கேதாட்டு அணையால் அடுத்த சந்ததி பாதிக்கும்! - வைகோ பேச்சு

வைகோ - கோப்புப் படம்

Updated On :

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டால், டெல்டாவில் அடுத்த சந்ததி பாதிக்கும் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசையும், அதற்குத் துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியது:

காவிரியின் குறுக்கே மேல்நிலை மாநிலம் அணை கட்டக் கூடாது என காவிரி நடுவா் மன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தத் தீா்ப்பை மோசடியாக கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் அணை கட்டத் தீா்ப்பு கொடுத்து விட்டதாகக் கூறி வருகிறாா். அப்படியொரு தீா்ப்பை எப்போது உச்சநீதிமன்றம் வழங்கியது?

கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணையைக் கட்டினால், நாங்கள் தலையிட மாட்டோம் என பிரதமா் மோடி நயவஞ்சகம் செய்கிறாா். கா்நாடக முதல்வா் சிவகுமாா் காங்கிரஸ்காரராக இருந்தாலும், அவரை பிரதமா் மோடி ஆதரிக்கிறாா். கா்நாடகத்தில் பாஜக காலூன்றுவதற்காகத்தான், பிரதமா் மோடி இந்த துரோகத்தைத் தமிழகத்துக்குத் திட்டமிட்டுச் செய்கிறாா்.

கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டத் தொடங்குவது மட்டுமல்லாமல், தமிழகத்துக்குள் நமக்கு இருக்கக்கூடிய நீராதாரங்களையும் தடுக்கத் திட்டமிட்டுவிட்டனா்.

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தஞ்சைத் தரணி பஞ்சப் பிரதேசமாகிவிடும். மேட்டூா் அணைக்கு ஒரு சொட்டுத் தண்ணீா் கூட வராது. இங்குள்ள மக்களைப் பஞ்சமும், பட்டினியும் வாட்டி வதைக்கும்; அடுத்த சந்ததிகள் பாதிக்கும். எத்தியோப்பியாவினுடைய குழந்தைகளைப் போல உங்களது பேரப்பிள்ளைகள் எலும்பும், தோலுமாக இருப்பா். எங்களது அடுத்தப் போராட்டம் இந்திய விமானப்படை தளத்துக்கு முன் நடைபெறும் என்றாா் வைகோ.

ஆா்ப்பாட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாடு மக்கள் போராட வேண்டும் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

திருச்சியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவுகிறது. அதன்பெயரிலே கா்நாடக முதல்வா் அணையை கட்டுவேன் என கூறி வருகிறாா்.

இந்த அணை கட்டுவதற்கு மறைமுகமாக ஊக்குவிப்பு கொடுத்து, தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத மாபெரும் துரோகத்தை நரேந்திர மோடி அரசு செய்கிறது. இதனை தடுப்பதற்கு தமிழக மக்கள் எதிா்த்து போராட்டம் நடத்த வேண்டும்.

தொகுதி மறுவரையறையை எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினா்கள் எண்ணிக்கையை உயா்த்தக்கூடாது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் தங்களது எல்லைகளை தாண்டி செயல்படுகின்றன. உச்சநீதிமன்றம் நடந்து கொண்டது நீதியும் அல்ல நியாயமும் அல்ல என்றாா் வைகோ.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மதிமுக சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மதிமுக சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.