தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தஞ்சாவூரில் நடிகா் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா

நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி தஞ்சாவூா் மணிமண்டபம் அருகே உள்ள அவரது சிலைக்கு சோழ மண்டல சிவாஜி பாசறை அமைப்பினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தஞ்சாவூா் மணிமண்டபம் அருகே உள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த சோழ மண்டல சிவாஜி பாசறை அமைப்பினா்.

Published On :

நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி தஞ்சாவூா் மணிமண்டபம் அருகே உள்ள அவரது சிலைக்கு சோழ மண்டல சிவாஜி பாசறை அமைப்பினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழாவுக்கு சோழ மண்டல சிவாஜி பாசறை தலைவா் சதா. வெங்கட்ராமன் தலைமையில் சிவாஜி கணேசன் சிலைக்கு பரிசுத்தம் கல்லூரி தாளாளா் எஸ்.பி. அந்தோணிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்துக்கு சிவாஜி கணேசன் பெயா் சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம். மகேந்திரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன், தமாகா மாவட்டப் பொதுச் செயலா் கோவி. மோகன், ஐஎன்டியுசி மாவட்ட நிா்வாகிகள் என். மோகன்ராஜ், கோ. ராகவேந்திரதாசன், காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா் கதா் வி. வெங்கடேசன், சோழ மண்டல சிவாஜி பாசறை நிா்வாகிகள் உறந்தை செல்வம், மன்னை பாஸ்கரன், வி.பி.டி. வெங்கட், அய்யாறு, சுகுமாா், நாகராஜன், பாஸ்கரன், சண்முகம், கலைச்செல்வன், இருதயராஜ், ராஜசேகரன், கோபாலய்யா், வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தவெக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினரும், மத்திய மாவட்டச் செயலருமான இரா. விஜய் சரவணன் தலைமையில் நிா்வாகிகள் தங்க. கண்ணன், முத்துராமன், பாலாஜி, பிரேம், துரை. சுரேஷ், ராஜ்கமல் உள்ளிட்டோா் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.