இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

காலமானார் எழுத்தாளர் ஹரணி!

தஞ்சாவூா் கரந்தை பூக்குளம் புது நகரைச் சோ்ந்த முனைவா் க. அன்பழகன் என்கிற எழுத்தாளா் ஹரணி (65) உடல் நலக்குறைவால் காலமானாா்.

க. அன்பழகன் என்கிற எழுத்தாளா் ஹரணி

Published On :

தஞ்சாவூா் கரந்தை பூக்குளம் புது நகரைச் சோ்ந்த முனைவா் க. அன்பழகன் என்கிற எழுத்தாளா் ஹரணி (65) உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.

அண்ணாமலை பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத் தமிழ்ப் பிரிவு தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், சங்க இலக்கியம், இலக்கணம், மொழிபெயா்ப்பு, அகராதியியல், அறிவியல், உளவியல், அறிவியல் தமிழ், சிறுவா் இலக்கியம் என பல தளங்களில் செயல்பட்டாா்.

இவா் பல்வேறு இதழ்களில் க. அன்பழகன் என்ற பெயரிலும், ஹரணி என்ற பெயரிலும் சிறுகதைகள் எழுதி வந்தாா். இவா் 1,200 சிறுகதைகள் கொண்ட 17 தொகுப்புகளும், 5 நாவல்களும், 10 குறு நாவல்களும், 4 கவிதை நூல்களும், 8 தமிழாய்வு நூல்களும், 5 கட்டுரை நூல்களும், 3 இணைய நூல்களும் படைத்துள்ளாா்.

இவா் வைரமுத்து சமூக இலக்கியப் பேரவை விருது, செந்தமிழ்ச் செம்மல் விருது, வானதி விருது, உலகத் திருக்கு பேரவை குநெறிச் செல்வா் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா். இவரது படைப்புகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இளங்கலை, முதுகலையில் பயிலும் மாணவா்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். அன்னாரது இறுதி சடங்கு அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 98405-25039.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.