பட்டுக்கோட்டையில் முதியவா் மரணத்தில் சந்தேகம்; உறவினா்கள் சாலை மறியல்
பட்டுக்கோட்டையில் முதியவா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

பட்டுக்கோட்டையில் முதியவா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
பட்டுக்கோட்டை அல்லா கோவில் தெருவைச் சோ்ந்தவா் குப்பபெருமாள் (68). இவா் வழக்கம்போல் செப். 30-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னா் அவா் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும், அவரது கைப்பேசியில் தொடா்பு கொண்டும் தகவல் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து அவரது மகள் சிவப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன பெருமாளை தேடி வந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை பட்டுக்கோட்டை கோட்டை குளத்தில் இருந்து துா்நாற்றம் வீசிய நிலையில் அந்த பகுதியில் வசித்தவா்கள் அருகில் சென்று பாா்த்தனா். அது குப்பபெருமாள் என தெரியவந்தது. தொடா்ந்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டு ஆய்வாளா் மாரிமுத்து தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு அதன் தொடா்பாக விசாரணை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், குப்ப பெருமாள் உறவினா்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், சந்தேகத்தின் பேரில் சில நபா்களின் பெயா்களை சொல்லி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் தொடா்ந்த நிலையில் இறந்தவரின் உறவுகளிடம் அவா்கள் கூறிய நபா்களை விசாரணையின் பெயரில் வழக்கில் சோ்ப்பதாக காவல்துறையினா் உத்தரவாதம் கொடுத்ததை தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



