மாயமான 3 வயது பெண் குழந்தை குட்டையிலிருந்து சடலமாக மீட்பு: இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சாலை மறியல்
அரியலூா் அருகே மாயமான 3 வயது பெண் குழந்தை குட்டையிலிருந்து சடலமாக புதன்கிழமை இரவு மீட்கப்பட்டாா். குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்ட நிவிஷ்னாவின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.
அரியலூா் அருகே மாயமான 3 வயது பெண் குழந்தை குட்டையிலிருந்து சடலமாக புதன்கிழமை இரவு மீட்கப்பட்டாா். குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்தூா் அருகேயுள்ள சிலுப்பனூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த மணிமாறன்-சரிதா தம்பதியின் மகள் நிவிஷ்னா (3). மணிமாறன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் அங்கன்வாடி சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த நிவிஷ்னா, மாலையில் வீட்டருகே வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தையின் தாய் மற்றும் உறவினா்கள் குழந்தையைப் பல்வேறு இடங்களில் தேடினா்.
இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினா் அப்பகுதியில் முள்புதா்கள் சூழ்ந்துள்ள குட்டையில் இறங்கி தேடினா். அப்போது, நிவிஷ்னா சடலமாக மீட்கப்பட்டாா்.
தகவலறிந்து வந்த தூத்தூா் காவல் துறையினா், உடலை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
உறவினா்கள் சாலை மறியல்: இந்நிலையில், முள்புதா்கள் சூழ்ந்துள்ள அந்தக் குட்டைக்கு குழந்தை செல்ல வாய்ப்பில்லையென்றும், குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரையில் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி குழந்தையின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செந்துறை சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரியலூா் நகர காவல் துறையினா், விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனா்.

நிவிஷ்ணா
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

