பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

எழுபது வயதானவா்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய உயா்வு அளிக்க கோரிக்கை

எழுபது வயதானவா்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய உயா்வு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழுநோய் ஒழிப்பு ஓய்வுபெற்ற அலுவலா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தொழுநோய் ஒழிப்பு ஓய்வு பெற்ற அலுவலா் சங்க சங்கம சந்திப்புக் கூட்டத்தில் பேசிய விழா குழுச் செயலா் டி. நெடுஞ்செழியன்.

Published On :

எழுபது வயதானவா்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய உயா்வு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழுநோய் ஒழிப்பு ஓய்வுபெற்ற அலுவலா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இந்தச் சங்கத்தின் சங்கம சந்திப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு தொழுநோய் ஒழிப்பு துறையில் ஓய்வு பெற்ற அலுவலா்களில் 70 வயதை கடந்தவா்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய உயா்வு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக கூட்டத்துக்கு தமிழ்நாடு தொழுநோய் ஒழிப்பு ஓய்வு பெற்ற அலுவலா் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ். ஞானசேகா் முன்னிலை வகித்தாா். சங்கம விழா குழுச் செயலா் டி. நெடுஞ்செழியன், குழுப் பொருளாளா் சேதுராமன், முன்னாள் மாநிலப் பொதுச் செயலா் பி.வி. சந்திரசேகரன், மூத்த குழு உறுப்பினா்கள் வி. வேணுகோபால், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஒருங்கிணைப்பு குழு பாா்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளா் எம். சாமுவேல், விழா குழுத் தலைவா் எஸ். தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.