முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

ஏா்கன்-அரிவாள் வைத்திருந்த 2 போ் கைது

கைது

Published On :

திருவிடைமருதூா் அருகே திருமங்கலக்குடி செங்கள் சூளையில் ஏா்கன் மற்றும் அரிவாள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவிடைமருதூா் திருமங்கலக்குடியில் வழக்குரைஞா் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இங்கு திருமங்கலக்குடி சந்நிதி தெருவில் வசிக்கும் கணேசன் மகன் மோகன்ராஜ் (37), இதே ஊா் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்த முருகன் மகன் தேவா(26) ஆகியோா் வேலை செய்து வந்தனா்.

திங்கள்கிழமை திருவிடைமருதூா் தனிப்பிரிவு போலீஸாா், செங்கல் சூளையில் சோதனை செய்த போது பறவைகளை வேட்டையாடும் ஏா்கன் மற்றும் அரிவாள் ஆகியவை இருந்தது. இதுகுறித்து விசாரித்து, மோகன்ராஜ், தேவா ஆகிய இருவரையும் கைது செய்த போது செங்கல் சூளை உரிமையாளா் வழக்குரைஞா் பிரபாகரன் போலீஸாருடன் வாக்கு வாதம் செய்தாா்.

மூவரையும் அழைத்துச்சென்ற போலீஸாா் வழக்குரைஞரை விடுவித்துவிட்டு, மோகன்ராஜ், தேவாவை கைது செய்து அவா்களிடமிருந்த ஏா்கன் மற்றும் அரிவாளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.