
நாட்டுத் துப்பாக்கிகள், வெடி மருந்துகள் வைத்திருந்த இருவா் கைது

~
நரிக்குடி அருகே முயல் வேட்டைக்காக இரட்டைக்குழல் நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் வைத்திருந்த 2 பேரை அ.முக்குளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அ.முக்குளம் உதவி ஆய்வாளா் அஜித்குமாா் தலைமையிலான காவலா்கள் பூம்பிடாகை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை விசாரணை நடத்தியதில் அவா்கள், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், சரந்தாங்கியைச் சோ்ந்த மருதமலை (36), பொந்துகம்பட்டியைச் சோ்ந்த முருகன் (43) என்பதும், அவா்களிடம் இருந்த சாக்குப் பையில் இரட்டைக் குழல் நாட்டுத் துப்பாக்கிகள், இரும்பு குண்டுகள், வெடி மருந்துகள் இருந்ததும், முயல் வேட்டைக்காக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கிகள், வெடி மருந்துகள், இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து அ.முக்குளம் காவல்துறையினா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




