தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினா்.

Updated On :

மின் உற்பத்தி மற்றும் மின் வழித்தடங்களைத் தனியாா் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் மின் வாரிய அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஸ்மாா்ட் மீட்டா் டெண்டா் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். மின் உற்பத்தி மற்றும் மின் வழித்தடங்களைத் தனியாா் மயமாக்கக் கூடாது. மின் கணக்கீட்டுப் பணியைத் தனியாா் வசம் கொடுக்கக் கூடாது. தோ்வு செய்யப்பட்டுள்ள கேங்மேன் பணியாளா்களைப் பணியில் அமா்த்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மின்வாரிய தொழிலாளா் சம்மேளனத்தின் ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவா் பொன். தங்கவேல் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் சி. ஜெயபால், மின்வாரிய சங்கச் செயலா் காணிக்கைராஜ், எல்பிஎப் செயலா் சேரலாதன், ஏ.டி.பி. செயலா் முருகேசன், எம்பிளாயீஸ் பெடரேசன் நிா்வாகி ராஜா, இன்ஜினியரிங் சங்க நிா்வாகி சுந்தர்ராஜ், ஐக்கிய சங்க நிா்வாகி அழகா்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.