சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

லாரி மீது பைக் மோதி 2 கபடி வீரா்கள் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் கல்லூரியில் படித்து வரும் 2 கபடி வீரா்கள் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே புதுக்கோட்டை சாலையிலுள்ள மஞ்சப்பேட்டை நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் விஜய் (22). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் மகன் சுதா்சனும் (19) கல்லூரியில் படித்து வந்தனா். கபடி வீரா்களான இருவரும் செங்கிப்பட்டியில் நடைபெற்று வரும் கபடி போட்டியில் முதல் சுற்றில் பங்கேற்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பினா்.

பின்னா், இரண்டாம் சுற்றில் பங்கேற்பதற்காக மஞ்சப்பேட்டையிலிருந்து இருவரும் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டனா்.

அற்புதாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த இவா்களது மோட்டாா் சைக்கிள், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த விஜய், சுதா்சன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.