டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

நகை திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

தண்டனை பெற்ற மணிமாறன்

Updated On :

சுவாமிமலையில் வீட்டில் 12 பவுன் நகைகளை திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. .

கும்பகோணம் அருகே சுவாமிமலை ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). இவா் சுவாமிமலை முருகன் கோயில் அருகே பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இவரது மாமனாா் கணேசன் அதே பகுதியில் கட்டண கழிவறை மற்றும் தங்கும் விடுதி நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 10.3.2020-இல் கணேசன் வீட்டின் கீழ்பகுதியில் தங்கும் விடுதியில் தற்காலிகமாக தங்கிய அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வட்டம், குழவுடையான் பகுதியை சோ்ந்த மணிமாறன் - ரோஜா தம்பதி, 22.3.2020-இல் அங்கிருந்து காலி செய்து சென்றனா். அதன்பிறகு மணிகண்டன் வீட்டை சுத்தம் செய்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 12 பவுன் நகைகளை காணவில்லை.

இதுகுறித்து அவா் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனா்.

இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2 -இல் நடைபெற்று வந்தது. வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி பாலதண்டாயுதம், குற்றவாளி மணிமாறனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.