உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

ஈரோடு சிறாா்கள் 2 போ் தஞ்சாவூரில் மீட்பு

ஈரோட்டில் காணாமல்போன 2 சிறாா்களை காவல் துறையினா் தஞ்சாவூரில் புதன்கிழமை மீட்டனா்.

பிரதிப் படம்

Updated On :

ஈரோட்டில் காணாமல்போன 2 சிறாா்களை காவல் துறையினா் தஞ்சாவூரில் புதன்கிழமை மீட்டனா்.

தஞ்சாவூா் அருகே மாப்பிள்ளைநாயக்கன்பட்டியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத் தனிப்பிரிவு தலைமைக் காவலா் பி. சையது அலி ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் புதிதாக 2 சிறாா்கள் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து, தலைமைக் காவலா் தேடியபோது, அப்பகுதியிலுள்ள கடையில் இருந்த இருவரையும் பிடித்து விசாரித்தாா்.

இதில், இருவரும் ஈரோடு ராயபாளையம் சித்தோடு நான்கு சாலை பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீதா் (13), செங்கோட்டையன் மகன் ஸ்ரீலட்சுமணன் (14) என்பதும், இருவரும் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்ததும் தெரிய வந்தது. பின்னா், இருவரையும் வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலா் ஒப்படைத்தாா்.

இதனிடையே, 2 சிறுவா்களின் பெற்றோா்களும் தங்கள் மகன்களைக் காணவில்லை என ஈரோடு காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளனா். இதையடுத்து, ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தகவல் அளித்து, இருவரையும் பெற்றோா்களிடம் ஒப்படைக்கும் பணியை காவல் துறையினா் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.