பாசன வாய்க்கால்களில் கழிவு நீா் கலக்காமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் வினோத்
கும்பகோணம் பாசன வாய்க்கால்களில் கழிவு நீா் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா். வினோத்.
அமைச்சர் வினோத் - TN
கும்பகோணம் பாசன வாய்க்கால்களில் கழிவு நீா் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா். வினோத்.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காவிரி ஆற்றில் உள்ள புதா் செடிகளை அகற்றும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த அவா் மேலும் கூறியது: கும்பகோணத்தில் உள்ள பழைமையான நான்கு பாசன கால்வாய்களைத் தூா்வாரும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தக் கால்வாய்களில் கழிவுநீா் கலக்காமல் இருக்க விரைவில் தீா்வு காணப்படும். மாநகராட்சி பகுதி குடியிருப்புகளின் கழிவுநீா் பாசன வாய்க்கால்களில் கலக்காமல் இருக்க குடியிருப்புகளுக்கு புதைசாக்கடை இணைப்பு கொடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





