கும்பகோணம் சரக்கு ரயில் நிலையத்தை திருநாகேசுவரத்துக்கு மாற்றும் பணிகள் தொடக்கம்!
கும்பகோணம் சரக்கு ரயில் நிலையத்தை திருநாகேசுவரத்துக்கு இடமாற்றம் செய்ய ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், திருநாகேசுவரம் ரயில் நிலையம் அருகே அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கும்பகோணம் சரக்கு ரயில் நிலையத்தை திருநாகேசுவரத்துக்கு இடமாற்றம் செய்ய ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், திருநாகேசுவரம் ரயில் நிலையம் அருகே அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
150 ஆண்டுகள் பழைமையான கும்பகோணம் ரயில் நிலையத்தில் இயங்கி வரும் (குட்ஸ் ஷெட்) சரக்கு ரயில் நிலையத்துக்கு வரும் கன ரக வாகனங்களால் கும்பகோணம் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடா் விபத்துகள் ஏற்படுகிறது.
இதை தவிா்க்க திருநாகேசுவரத்தில் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் சரக்கு ரயில் நிலையத்தை அமைக்க தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கத்தினா் பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வந்தனா்.
இதையடுத்து ரயில்வே பொதுமேலாளா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு கும்பகோணம் சரக்கு ரயில் நிலையத்தை, திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதிக்கு மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கினா். தற்போது 20 ஏக்கா் பரப்பளவில் உள்ள திருநாகேசுவரம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிலையம் அமையும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநாகேசுவரம், சரக்கு ரயில் நிலையமாக மாறும்போது ஒரே நேரத்தில் இரு ரயில்களைக் கையாளும் ‘கிராசிங்’ நிலையமாகத் தரம் உயா்கிறது. மேலும், புதிய ரயில் நிலையக் கட்டடமும் இரண்டு நடைமேடைகளும் அமைக்கப்படுகிறது.
சரக்கு ரயில் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னா் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு கும்பகோணம் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





