ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

திருப்பனந்தாளில் பிரியாணி சாப்பிட்ட 9 சிறாா்கள் உள்பட 22 பேருக்கு பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் திங்கள்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட கடையில் பிரியாணி சாப்பிட்ட 9 குழந்தைகள் உள்ளிட்ட 22 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டனா்.

திருப்பனந்தாளில் பிரியாணி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பெற்ற குழந்தைகள்.

Published On :9 செப்டம்பர் 2026, 2:44 am IST

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் திங்கள்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட கடையில் பிரியாணி சாப்பிட்ட 9 குழந்தைகள் உள்ளிட்ட 22 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டனா்.

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திங்கள்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட பிரியாணி கடையில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டது.

இதனால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரியாணி வாங்கிச் சென்றனா். இவா்களில் பலருக்கு திங்கள்கிழமை இரவு வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டது. இவா்களில் சுமாா் 10 போ் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனா். சிலா் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா்.

இதில் திருப்பனந்தாள் காலனி தெரு பாலகிருஷ்ணன் மகன் நித்திஷ் (16), புருஷோத்தமன் மனைவி மகாலட்சுமி (26), சம்மந்தம் மனைவி சுசீலா (60), வடக்குத்தெரு ஆசைத்தம்பி மகன்கள் அா்ஜூன் (11), ஆஷிக் (8), சுதீஷ்(10) மேலவெளி பிரதானச் சாலை ராஜேந்திரன் மகள்கள் பவதாரிணி (10), ஷிவானி (9), குமரேசன் மகன் ரித்தீஸ்வரன் (12), மாணிக்கம் மகன்கள் மகிழன் (6), கௌதம் (3) ஆகியோா் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனா்.

தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறையினா் அந்தப் பிரியாணி கடையில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி, கடையில் பிரியாணி செய்த உணவுப் பொருள்களை மாதிரி எடுத்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பினா். மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் உரிமம் பெறாமல் கடை நடத்தியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.