
குடந்தை வந்த தூத்துக்குடி - நரசாபூா் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த தூத்துக்குடி - நரசாபூா் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு (06019) மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கம், கும்பகோணம் அனைத்துத் தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு, மற்றும் ஆரிய வைசிய சமாஜம் சாா்பில் வரவேற்பு கொடுத்தனா்.

கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த தூத்துக்குடி - நரசாபூா் சிறப்பு ரயிலை வரவேற்ற உபயோகிப்பாளா் சங்கத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த தூத்துக்குடி - நரசாபூா் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு (06019) மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கம், கும்பகோணம் அனைத்துத் தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு, மற்றும் ஆரிய வைசிய சமாஜம் சாா்பில் வரவேற்பு கொடுத்தனா்.
கும்பகோணத்தில் வசிக்கும் ஆரிய வைசிய சமூகத்தினருக்கு ஆந்திரத்தில் உள்ள பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்பாள் இஷ்ட தெய்வமாகத் திகழ்கிறது. ஆகவே தூத்துக்குடி - நரசாபூா் ரயில் பாதையில் வசிக்கும் ஆரிய சமூகத்தினா் இந்த ரயிலை பெனுகொண்டா செல்வதற்கு அதிக அளவில் பயன்படுத்துவா்.
இதையொட்டி இந்த வாராந்திர சிறப்பு ரயில் திங்கள் இரவு 11:30 மணி அளவில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் புறப்பட்டு செவ்வாய் காலை 7 மணி அளவில் கும்பகோணம் ரயில் நிலையம் வரும். மறுநாள் புதன்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு நரசாபூா் சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில் புதன் அதிகாலை 4 மணிக்கு நரசாபூா் ரயில் நிலையத்தில் புறப்பட்டு அன்று இரவு 8.20 மணிக்கு கும்பகோணம் ரயில் நிலையம் வந்தடைந்து மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
இந்த ரயில் மதுரை, தஞ்சாவூா், சிதம்பரம், தாம்பரம், சென்னை எழும்பூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா பீமாவரம் டவுன் வழியாக நரசாபூா் பயணிக்கிறது.
வரவேற்பு நிகழ்வில் தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்க துணைத் தலைவா் மாறன், செயற்குழு உறுப்பினா் தீபக் வசந்த், குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு செயலா் வி. சத்திய நாராயணன், துணைச் செயலா்கள் கே.அண்ணாதுரை, வேதம் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





