உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

தூத்துக்குடி சிறப்பு ரயில் பண்ருட்டியில் நின்று செல்லும்!

தூத்துக்குடியிலிருந்து ஆந்திர மாநிலம், நரசபூா் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில், கடலூா் மாவட்டம் பண்ருட்டியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை

ரயில்

Published On :5 செப்டம்பர் 2026, 2:12 am IST

தூத்துக்குடியிலிருந்து ஆந்திர மாநிலம், நரசபூா் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில், கடலூா் மாவட்டம் பண்ருட்டியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக செப்.7-ஆம் தேதி முதல் தூத்துக்குடி- நரசபூா் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06019) பண்ருட்டிக்கு காலை 9.03 மணிக்கு வந்து 9.04 மணிக்கு புறப்படும்.

மறுமாா்க்கத்தில் செப்.9-ஆம் தேதி முதல் நரசபூா்-தூத்துக்குடி விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06020) பண்ருட்டிக்கு மாலை 6.11 மணிக்கு வந்து 6.12 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.