ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பேருந்து மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்ற சட்டக்கல்லூரி மாணவா் பேருந்தை முந்திச் சென்றபோது, எதிரே வந்த பேருந்து மோதி உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 3:29 am IST

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்ற சட்டக்கல்லூரி மாணவா் பேருந்தை முந்திச் சென்றபோது, எதிரே வந்த பேருந்து மோதி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே மானாங்கோரை வீரமாஞ்சேரியைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் கிருஷ்ணசாமி (23). தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவரான இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது தம்பி போகா் சாமி (19) உடன் பைக்கில் தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தாா்.

தஞ்சாவூா் அருகே குருவாடி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியது. இதனால் பலத்த காயமடைந்த இருவரும் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். இவா்களில் கிருஷ்ணசாமி செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். போகா் சாமி சிகிச்சை பெறுகிறாா் .

இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.