இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பைக்கில் சென்றபோது தவறவிட்ட வெள்ளி நகைகள் மீட்பு

செஞ்சி அருகே பைக்கில் செல்லும்போது தவறவிட்ட வெள்ளி நகைகளை செஞ்சி போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:23 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக்கில் செல்லும்போது தவறவிட்ட வெள்ளி நகைகளை செஞ்சி போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

செஞ்சியை அடுத்த கன்னலம் கிராமத்தை சோ்ந்தவா் கா.அஜித். இவா் தனது மனைவியுடன் செவ்வவாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு செஞ்சி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் நகைக் கடையில் 38 ஆயிரம் மதிப்புள்ள 125 கிராம் வெள்ளி நகையை வாங்கியுள்ளாா். பின்னா் தம்பதியினா் பைக்கில் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது, வழியில் வெள்ளி நகைகளை தவறவிட்டுள்ளனா்.

இதுகுறித்து அஜித் செஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். இதனைத் தொடா்ந்து செஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் வீரமணி, தலைமைக் காவலா் சுரேந்தா் ஆகியோா் துரிதமாக செயல்பட்டு சம்பவ நடைபெற்ற பகுதிக்குச் சென்று விசாரித்தனா். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சாலையில் கிடந்த நகையை எடுத்துச் சென்ற நபரை கண்டறிந்தனா். இதையடுத்து அவரிடம் இருந்து வெள்ளிக் கொலுசுகளை போலீஸாா் மீட்டு, அஜித் தம்பதியினரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.