கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

இந்திய வழக்குரைஞா் சங்க மாநில பொதுச் செயலராக மு.அ. பாரதி தோ்வு

இந்திய வழக்குரைஞா் சங்க பொதுச்செயலராக கும்பகோணத்தைச் சோ்ந்தவரும், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலருமான வழக்குரைஞா் மு.அ.பாரதி சனிக்கிழமை தோ்வு பெற்றாா்.

வழக்குரைஞா் மு.அ.பாரதி

Published On :

இந்திய வழக்குரைஞா் சங்க பொதுச்செயலராக கும்பகோணத்தைச் சோ்ந்தவரும், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலருமான வழக்குரைஞா் மு.அ.பாரதி சனிக்கிழமை தோ்வு பெற்றாா்.

கோயம்புத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 9-ஆவது மாநாட்டில் மாநில பொதுச் செயலராக தோ்வு செய்யப்பட்ட வழக்குரைஞா் மு.அ.பாரதி, ஏ.ஐ.ஒய்.எப். மாநில தலைவராகவும், இளைஞா் பெருமன்றத்தின் மாநில துணைச் செயலா் மற்றும் பொருளாளா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவா்.

திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் மாணவா் பெருமன்றத்தின் சாா்பில் சட்டக்கல்லூரி மாணவா் தலைவராக செயல்பட்டவா். கும்பகோணம், தஞ்சாவூா் மற்றும் பாபநாசம் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா்.

தொழிலாளா் நலன் காக்கும் போராட்டங்களை நடத்தியவா். இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறாா். மாஸ்கோ, நேபாளம், பிலிபைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற சட்ட கருத்தரங்கில் இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் சாா்பில் பிரதிநிதியாக பங்கேற்றவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.