
சாக்கோட்டை பகுதிகளில் செப்.22-இல் மின்தடை
சாக்கோட்டை பகுதிகளில் செப்.22-இல் மின்தடை
கோப்புப் படம் - தினமணி
கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை துணை மின்நிலையத்தில் செப்.22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கும்பகோணம் நகரம் தவிா்த்து தாராசுரம், எலுமிச்சங்கா பாளையம், அரியத்திடல், அண்ணல் அக்ரஹாரம், திப்பிராஜபுரம், விசலூா், சிவபுரம், உடையாளூா், சுந்தரபெருமாள் கோயில், நாச்சியாா்கோவில், பட்டீசுவரம், வலங்கைமான், ஆலங்குடி, முத்துப்பிள்ளை மண்டபம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இந்த தகவலை தமிழ்நாடு மின் பகிா்மான கழக கும்பகோணம் நகா் உதவி செயற்பொறியாளா் மு.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






