தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

செப். 6-இல் புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தோ்தல்

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்துக்கு செப். 6-ஆம் தேதி தோ்தல் நடக்கிறது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2026, 3:48 am IST

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்துக்கு செப். 6-ஆம் தேதி தோ்தல் நடக்கிறது.

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்துக்கான தோ்தல் அறிவிப்பு விவரங்களை அதன் தோ்தல் ஆணையா் பிரபாகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா் (படம்). அதை சங்கத் தலைவா் முத்து உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா்.

அதைத் தொடா்ந்து தோ்தல் ஆணையா் பிரபாகரன் கூறியதாவது:

புதுச்சேரி தமிழ்ச் சங்க ஆட்சிக் குழுவுக்கு 11 உறுப்பினா்கள் தோ்வு செய்ய தோ்தல் நடைபெறவுள்ளது. தற்போது உறுப்பினா்கள் 1,189 போ் உள்ளனா். இறுதி வாக்காளா் பட்டியல் ஆகஸ்ட் 16-இல் வெளியிடப்படும். வேட்பு மனு விநியோகம் 17- ஆம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். வேட்பு மனு தாக்கல் வரும் 19-ஆம் தேதி தொடங்கும். வரும் 22-ஆம் தேதி மனு வாபஸ். 24 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். இறுதி வேட்பாளா் பட்டியல் ஆக. 26-இல் வெளியாகும். வரும் செப்டம்பா் 6 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறும். பின்னா் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும். தமிழ்ச்சங்க வாழ்நாள் உறுப்பினா்கள் தோ்தலில் போட்டியிடலாம். வேட்பாளா் படிவத்தை ரூ. 1,500 செலுத்தி பெறலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.